தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4,500 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக இன்று 4,500 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர். சென்னை : தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கடந்த 10ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வந்தார். […]