நடிகர் விவேக் மறைவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் விவேக் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், நடிகர் விவேக் மறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மறைவால் வேதனை அடைந்தேன். 30 வருடங்களுக்கும் […]