கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா!
சென்னை: மேகாலயா முன்னாள் முதல்வர் சண்முகநாதன், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன். கோவையில் தங்கியுள்ளார். அவருக்கு இரு நாட்களுக்கு முன்னர், கொரோனா அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, உடல்நலத்துடன் உள்ளார்.அதேபோல், கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்தவருமான குமாரசாமிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. […]