சீனாவில் கிளம்பிய இன்னொரு கொடிய வைரஸ்…

சீனாவில் கிளம்பிய இன்னொரு கொடிய வைரஸ்…
Spread the love

சீனாவில் மிக கொடிய நோய் தொற்று வைரஸாக அறியப்படும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2018, 2019 ஆண்டுகளில் சீனாவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவியது. இதனால் எண்ணிலடங்கா பன்றிகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன.

இந்நிலையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் இயற்கையாகவே உருமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2018-19 காலகட்டத்தில் தாக்கிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸை காட்டிலும் உருமாறிய புதிய வைரஸ் பாதிப்பு குறைந்ததாக இருப்பதாக சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சீன கால்நடை அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில், மேற்கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி உருவாக்கப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை.

சீன பன்றி பண்ணைகளில் பரவியுள்ள இரண்டு வகை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வைரஸ்கள் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது.

இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கான அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்துவிடவும் முடியாது. இதனால்தான் இந்த வைரஸ்கள் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என ராய்ட்டர்ஸ் சந்தேகிக்கிறது.

சீனாவுக்குள் தொடர்ந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாகவும், இவை உருமாறுவதை தவிர்க்க முடியாது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே வைரஸ்கள் வீரியம் குறைந்த நிலையில் அண்மை ஆண்டுகளில் லாட்வியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *