கொரோனாவால் மேலும் 5 பேர் பலி…

கொரோனாவால் மேலும் 5 பேர் பலி…
Spread the love

தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை(8,43,209) ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 149 ( 2,32,765)
  • இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,43,209 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,26,504 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • இன்று மட்டும் 493 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,396 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *