இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை

இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை
Spread the love

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வார நாட்களில் ரெயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை) உச்ச நேரங்களில் (பீக் அவர்) 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் ரெயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.

எனவே, 12-ந்தேதி (இன்று) முதல் மெட்ரோ ரெயில் சேவைகள் உச்ச நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் காலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில் சேவைகள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *