உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம்… முதல்வர் அறிவிப்பு

உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம்… முதல்வர் அறிவிப்பு
Spread the love

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவியை அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சென்னை, மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை என தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ள்ளதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், தலா ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 100ற்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மேலும் 64 காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *