சென்னை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கியது. 14வது ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் குறிப்பிட்ட 5 நகரங்களில் மட்டும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சீசனுக்காக 8 அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்கவைத்ததுடன், தேவையில்லாத வீரர்களை விடுவித்துவிட்டன. இந்நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் சென்னையில் தொடங்கியது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். இதில் இறுதி பட்டியலில் 164 இந்திய வீரர்கள், 128 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 292 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ்
- கருண் நாயர், அலெக்ஸ் ஹாலெஸ், ஜேசன் ராய், ஏவின் லெவிஸ், ஆரோன் பின்ச், ஹனுமா விஹாரி ஆகியோர் ஏலம் போகவில்லை
- கிளென் மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி
- கேதார் ஜாதவ் ஏலம் போகவில்லை
- ஷாகிப் அல் ஹாசனை ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி
- மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி
- சிவம் துபேவை ரூ.4.4 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி