ரூ. 16.25 கோடி அதிக விலைக்கு தேர்வான கிறிஸ் மோரிஸ்..

ரூ. 16.25 கோடி அதிக விலைக்கு தேர்வான கிறிஸ் மோரிஸ்..
Spread the love

ஏலத்தில் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

டேவிட் மலானை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.
கிறிஸ் மோரிஸ் – 16.25 – ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிவம் டுபே – ரூ. 4.40 கோடி – ராஜஸ்தான் ராயல்ஸ்
டேவிட் மலான் – ரூ. 1.50 கோடி – பஞ்சாப்
மொயீன் அலி – ரூ. 7 கோடி – சிஎஸ்கே
மேக்ஸ்வெல் – ரூ. 14.25 கோடி – ஆர்சிபி
சகிப் அல் ஹசன் – 3.20 கோடி – கேகேஆர்
கெதர் ஜாதவ் – தேர்வாகவில்லை

முதல் சுற்றில் ஏலத்தில் பங்கேற்ற வீரர்களும் அவர்கள் தேர்வான விவரங்களும்

ஆரோன் ஃபிஞ்ச் – தேர்வாகவில்லை
அலெக்ஸ் ஹேல்ஸ் – தேர்வாகவில்லை
எவின் லூயிஸ் – தேர்வாகவில்லை
கருண் நாயர் – தேர்வாகவில்லை
ஜேசன் ராய் – தேர்வாகவில்லை
ஸ்டீவ் ஸ்மித் – ரூ. 2 கோடி – தில்லி
ஹனுமா விஹாரி – தேர்வாகவில்லை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. 292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும்.

8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன.

அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *