விலை போகாத வீரர்…சென்னை சென்ற ஸ்மித்…

விலை போகாத வீரர்…சென்னை சென்ற ஸ்மித்…
Spread the love

2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலமானது இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக 8 அணிகளின் நிர்வாகிகள் தங்கள் அணியின் பயிற்சியாளர்களுடன் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த மினி ஏலத்திற்காக உலகம் முழுவதும் இருந்து 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 292 பேர் மட்டுமே அடுத்த லிஸ்டில் தேர்வு பெற்றார்கள். 292 வீரர்களில் 61 இடங்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 292 வீரர்களில் 164 பேர் இந்தியர்கள் ஆவர். 65 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். வெளிநாட்டவர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் 17 பேரும் உள்ளனர்.

ஏலம் தொடங்கிய உடனே முதல் வீரராக கருண் நாயர் ஏலம் விடப்பட்டார். அவருடைய அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட நிலையில், அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதற்கடுத்து ஏலம் விடப்பட்ட அலெக்ஸ் ஹெல்ஸ், ஜேசன் ராய் இருவரையும் எந்த அணியும் வாங்கவில்லை. முதல் நபராக ஸ்டிவன் ஸ்மித் ஏலம் எடுக்கப்பட்டார். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு பெங்களூர், பஞ்சாப் அணிகள் கேட்க, டெல்லி அணி 2 கோடி 20 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *