Spread the love
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று வெவ்வேறு இடங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களில், ஐந்து பேர் இறந்தனர்; இரண்டு பேர் காயம் அடைந்தனர்.காபூலின் தாருலமன், கார்ட் – இ – பர்வான், புல் – இ – வாக்தாத் ஆகிய பகுதிகளில், நேற்று காலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.பயங்கரவாதிகள், போலீஸ் மற்றும் ராணுவ வாகனங்களை குறி வைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம், குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் இறந்தனர்; இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு, இதுவரையிலும், எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.