போலீஸ் துப்பாக்கிச் சூடுமியான்மரில் 2 பேர் பலி

போலீஸ் துப்பாக்கிச் சூடுமியான்மரில் 2 பேர் பலி
Spread the love

மாண்ட்லே: தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் அரசை கவிழ்த்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்’ என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. யாங்கூன், மாண்ட்லே, தலைநகர் நேய்பிடா உட்பட பல நகரங்களில், நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்ட்லேவில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் இறந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *