திருக்கடையூர் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
Spread the love

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள எமன் பயம் போக்கும் திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்ய வந்தார்.


திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார்.

அவருக்கு மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் தருமைபுரம் ஆதீனம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக ஆதீனம் மீனாட்சி சந்தர தம்பிரான் தலைமையில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் எமன் பயம் போக்கும் சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்ய வந்தேன். கொரோனா தடுப்பூசி போட ஊக்கப்படுத்தபட வேண்டும் புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கான நன்மைகள் நிச்சயம் நடக்கும். நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டுரிமையை சட்டரீதியாக பார்த்துக் கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *