புதுச்சேரியில் நாளை கூடுகிறது சட்டப்பேரவை… நாராயணசாமி இன்று அவசர ஆலோசனை…

புதுச்சேரியில் நாளை கூடுகிறது சட்டப்பேரவை… நாராயணசாமி இன்று அவசர ஆலோசனை…
Spread the love

புதுச்சேரி: பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார்.

புதுச்சேரியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இதற்கிடையே அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் சட்டபேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி 14, எதிர்க்கட்சிகள் 14 என சமநிலையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் இருந்து வருகிறது.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதன்பேரில் 22ம் தேதி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கெடு விதித்தார். அதன்படி நாளை காலை 10 மணிக்கு சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் என பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார். ஆளுநர் தமிழிசை உத்தரவின்பேரில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது. இதனிடையே புதுச்சேரி காங். கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *