கோவிஷீல்ட் விநியோகத்திற்காக கொஞ்சம் பொறுமையா இருங்க… சீரம் நிறுவன சிஇஓ வேண்டுகோள்

கோவிஷீல்ட் விநியோகத்திற்காக கொஞ்சம் பொறுமையா இருங்க… சீரம் நிறுவன சிஇஓ வேண்டுகோள்
Spread the love

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க எஸ்ஐஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்தார்.

கோவிஷீல்ட் விநியோகத்திற்காக காத்திருக்கும் நாடுகளும் அரசாங்கங்களும் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு ஆதார் பூனவல்லா மேலும் கேட்டுக்கொண்டார்.

“சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி இயக்கப்பட்டுள்ளது. அதோடு உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் சமநிலைப்படுத்துகிறது” என்று ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில் ஆதார் பூனவல்லா, “அன்புள்ள நாடுகளும் அரசாங்கங்களும், நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும்போது, ​​தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவின் சீரம் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.” எனக் கூறினார்.

முன்னதாக பிப்ரவரி 15’ஆம் தேதி, தடுப்பூசி தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை ஒரு மாதத்திற்குள் கனடாவுக்கு அனுப்பப்போவதாக கூறியிருந்தது.

கோவிஷீல்ட் என்பது அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியின் பிராண்ட் பெயர் ஆகும்.

இந்தியா ஏற்கனவே 229 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது. அதில் 64 லட்சம் டோஸ் மானிய உதவியாகவும், வணிக அடிப்படையில் 165 லட்சமாகவும் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 12 அன்று தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் உலகில் தடுப்பூசிகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், மற்ற நாடுகளின் தடுப்பூசிகளை விட இந்தியத் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், பல்வேறு நாடுகளும் இந்தியாவிடம் தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *