Spread the love
5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக நாளை மறுநாள் பிப். 23ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இதனையடுத்து அன்றைய தினமே தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மே.வங்கம், அசாம் மாநில சட்டசபைகளில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக நடக்க உள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணையம், துணை ஆணையர்கள் குழுவினர் கூடி தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய உள்ளது.