கோவையில் நடத்தப்பட்டு வரும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை : கோவையில் நடத்தப்பட்டு வரும் யானைகள் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் பாகன்கள் யானையை கடுமையாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவை பாகன்கள் கடுமையாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பதைபதைக்க வைத்தது. அந்தக் காட்சியில் இரு பாகன்களும் யானையை கடுமையாக தாக்குகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான யானை வலி தாங்க முடியாமல் பிளிறுகிறது.
பாகன் பேச்சை யானை கேட்காததால் என்பதால் யானை தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேசிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் யானையை தாக்கிய பாகன் வினில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.