தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 452 பேர் பாதிப்பு…

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 452 பேர் பாதிப்பு…
Spread the love

சென்னை: தமிழகத்தில் மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 275 (8,48,275) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,48,275 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 460 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,31,706 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,460 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 3; தனியார் மருத்துவமனையில் 0 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 154 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 234345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,71,20,745 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 50,148 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 4,109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,12,585 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 275 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,35,655 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 177 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 257 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 188.
  • வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடகா-2.
  • வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *