Spread the love
சட்டசபை கூடுவதற்கு முன் நாளை காலை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார். புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஐந்து பேர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி பொருப்பு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
எனவே நாளை காலை சட்டபேரவை கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி கட்சியை சேர்ந்த ரெங்கசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் நாராயணசாமியை பதவி விலக வேண்டும் என எதிர்ப்பு தெவித்து வருகின்றனர். இதையடுத்து நாளை சட்டசபை கூட்டப்பட்டு பெருன்பான்மை நிரூபிக்கப்படவுள்ளது. இதுவரை 5 எம்எல்ஏ க்கள் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.