Spread the love
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருமூலையைச் சேர்ந்தவர் மகேந்திரன் 40 லாரி டிரைவர். இவரது உறவினர் மணிமாறன் 38 இவரும் லாரி டிரைவர். அருகருகே வசித்து வருகின்றனர். இரு வீட்டாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மகேந்திரன் அவரது மனைவி மகாலட்சுமி அவரது தாய் காளியம்மாள் ஆகியோரை மணிமாறன் அவரது மனைவி கவிதா 32 ஆகியோர் கட்டையால் தாக்கினர். இதில் மூவரும் படுகாயம் அடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மகேந்திரன் உயிரிழந்தார். பந்தநல்லுார் போலீசார் மணிமாறன் கவிதாவை கைது செய்தனர்.