Spread the love
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை துன்புறுத்திய பாகன் வினில் குமார், உதவி பாகன் சிவபிரசாத் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
கோயம்புத்துார் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இம் முகாமில் பங்கேற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவும் சென்றது.அங்கு யானையை பாகன் கேரளாவை சேர்ந்த வினில்குமார், உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் அடித்து துன்புறுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் இது குறித்து விசாரித்து யானை பாகன்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்தார். செயல் அலுவலர் யானைகள் முகாமிற்கு புறப்பட்டு சென்றார்.