இன்று எகிறிய தங்கம் விலை …

இன்று எகிறிய தங்கம் விலை …
Spread the love

அண்மைக்காலமாக தங்கம் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பிப்ரவரி 17ஆம் தேதியன்று தங்கம் விலை திடீரென கணிசமாக உயர்ந்தது. அதன்பின் 18, 19 தேதிகளில் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், நேற்று முதல் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 35008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தினம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 4348 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரு கிராம் தூய தங்கம் 4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 38080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தினம் ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 4732 ரூபாயாக இருந்தது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 73.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய தினம் ஒரு கிராம் வெள்ளி 73.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *