ஐ.நா. பொதுச் செயலாளர் இந்தியாவுக்கு நன்றி…

ஐ.நா. பொதுச் செயலாளர் இந்தியாவுக்கு நன்றி…
Spread the love

ஐ.நா. அமைதிப் படையினருக்காக கொரோனாதடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கிய இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே இதர நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.ஐ.நா.வின் அமைதிப் படையினருக்காக சமீபத்தில் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டன.இந்நிலையில் இந்த உதவிக்கு ஐ.நா. பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்திர துாதர் திருமூர்த்தி ‘டுவிட்டர்’ வாயிலாக குறிப்பிட்டுள்ளதாவது:அமைதிப் படையினருக்காக இரண்டு லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’களை வழங்கியதற்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பிவைத்தார்.

அதில் உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா தலைமைத்துவத்துடன் இருப்பதை குட்டரெஸ் குறிப்பிட்டார்.மேலும் மருந்துகள் பரிசோதனை கருவிகள் ‘வென்டிலேட்டர்’கள் உள்ளிட்டவற்றை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வினியோகித்து உதவி வருவதற்கு இந்தியாவை பாராட்டினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *