விக்ரம்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள் … குஷியில் சீயான் ரசிகர்கள்

விக்ரம்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள் … குஷியில் சீயான் ரசிகர்கள்
Spread the love

நடிகர் விக்ரம்-க்கு அடுத்தடுத்து இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.

நடிகர் சீயான் விக்ரம் தற்போது இன்னும் பெயர் அறிவிக்கப்படாத ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் விக்ரம் உடன் அவரது மகன் த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். சீயான் 60 படத்தில் நாயகி ஆக வாணி போஜன் நடிக்கிறார்.

தற்போது விக்ரம் தனது கோப்ரா படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சீயான் 60 படப்பெயர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், விக்ரம் விரைவில் இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கான படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு படம் நிச்சயம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *