இந்திய ராணுவத்தின் செயல் என கூறி வைரலாகும் வீடியோ

Spread the love

இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை என கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியா, சீனா எல்லையில் கடந்த ஒன்பது மாதங்களாக நிலவி வந்த கடும் பதற்ற சூழல் தற்சமயம் படிப்படியாக விலகி வருகிறது. லடாக்கின் பாங்கோங் ஏரியில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ படைகளை விலக்கிக்கொள்ளும் விவகாரத்தில் பிப்ரவரி 11 ஆம் தேதி பரஸ்பரம் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பிப்ரவரி 16 ஆம் தேதி சீன படைகள் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் இருந்து வெளியேறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. இந்த நிலையில், சீன பங்கர்களை இந்திய ராணுவம் தாக்கி அழிப்பதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவில் இரண்டு ஜெசிபி எந்திங்கள் கான்க்ரீட் சுவர்களை இடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு நிற சீருடையில் சிலர் அந்த பகுதியில் நின்று கொண்டு பணிகளை மேற்பார்வை செய்கின்றனர்.

என்ன தோன்றுகிறதோ அதை நம்மால் செய்ய முடியும். 150 சீன டேங்கர்கள் மற்றும் 5 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் தப்பித்ததை ஒட்டி இந்திய ராணுவம் சீன பங்கர்களை அழித்தது எனும் தலைப்பில் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது உத்தராகண்ட் மாநிலத்தின் மீட்பு பணிகளின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் சமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்தில் பனிச்சரிவு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் பின் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோ தவறான தலைப்பில் பகிரப்படுகிறது.

அந்த லடாக் எல்லையில் இந்திய ராணுவம் சீன பங்கர்களை அழிக்கவில்லை என்பதும், வைரலாகும் வீடியோ அப்பகுதியில் எடுக்கப்படவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *