Spread the love
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி-42. இவர் கிரைண்டர் ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் புறம்போக்கு நிலம் ஒன்றை மடக்கி உள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் லட்சுமியின் இடம் என்னுடையது என கூறி லட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மருத்துவமனையில் சான்றிதழை பெற்று வருமாறு கூறி அனுப்பி உள்ளனர்.
அப்போது லட்சுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் லட்சுமியிடம் 300-ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அப்போது அங்கிருந்தவர்கள் அவர்மீது தண்ணீர் ஊற்றி லட்சுமியை காப்பாற்றினார். அவரை மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.