பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சுரேஷ்

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சுரேஷ்
Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகமானார்.

இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தைப் பெற்ற சுரேஷ் சக்ரவர்த்தி, தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை அவரே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *