வீட்டு காவலில் வைக்கப்பட்ட – விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காரணம் என்ன?

வீட்டு காவலில் வைக்கப்பட்ட – விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு காரணம் என்ன?
Spread the love

இன்று சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு சென்னை வர இருந்தார். அவரை, போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்தனர்.

சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பின்னர், நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களை சந்திப்பார். மேலும், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தப்படும். அப்போது, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என முடிவெடுக்கும்.

இந்நிலையில், DNT/DNC என்றில்லாமல் ஒரே DNT சான்றிதழ் வழங்க கோரியும்,
காவிரி அய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரியும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முடிவு செய்தார். இதையொட்டி தனது ஆதரவாளர்களுடன், இன்று அதிகாலையில் சென்னைக்கு புறப்பட்டார்.

இதையறிந்த போலீசார், சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் P.அய்யாக்கண்ணுவை, வீட்டில் இருந்து புறப்படும்போது தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர், சென்னை செல்ல கூடாது என கூறி, அவரது வீட்டுககு திருப்பி அனுப்பினர். இதனால், அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும், போலீசார் அவரை சென்னை செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சங்க கரூர் மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, சங்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சிதம்பரம் மற்றும் மதிவாணன் ஆகியோரையும் சென்னை செல்லாமல் தடுத்து வீட்டு காவலில் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *