அமமுக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது

அமமுக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது
Spread the love

திருப்பத்தூர் அருகே அமமுக நிர்வாகி கொலை வழக்கில் கூலிப்படையினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அமமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன் (28). கடந்த சில நாட்களுக்கு முன், திருப்பத்தூரில் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமபேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர் சங்கர் (62) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் வானவராயனை பெங்களூருவை சேர்ந்த கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்தவர் தாமஸ் (28), சூர்யா (28), திருப்பத்தூர் அம்ரிஷ் (21) ஆகியோரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *