கட்டிட மேஸ்திரியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை – மைத்துனன் கைது

கட்டிட மேஸ்திரியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை – மைத்துனன் கைது
Spread the love

ஜோலார்பேட்டை அருகே கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் குமரன் (30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில், கடந்த 2014ம் ஆண்டு ரம்யா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வந்த குமரன், அஞ்சலி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரம்யா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை குமரன், வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த ஒரு ஆசாமி, குடிக்க தண்ணீர் கேட்டார். இதையடுத்து மனைவி அஞ்சலி வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் குளியலறையில் இருந்து குமரன் வெளியே வந்தார். அஞ்சலி வேலை செய்து கொண்டிருந்ததால் அவர் தனது கணவரிடம் தண்ணீர் கொடுக்க கூறியுள்ளார்.

குமரனும் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தபோது, எதிரே முதல் மனைவி ரம்யாவின் தம்பி ராஜிவ் (23) நிற்பதை கண்டு அதிர்ச்சியைடந்தார். உடனே ராஜிவ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். உடனே குமரன் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ராஜிவ் தப்பினார். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது, ஸ்பீக்கர் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால், குமரனின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

தகவலறிந்து ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலததை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ராஜிவ்வை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *