தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் பெண்கள் தலைமையில் கருப்பு உடையில் சாலை மறியல் போராட்டம் தூத்துக்குடியில் தென்பாகம் காவல்நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பபாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சமையலர்க்கு / சமையல் உதவியாளார்க்கு ரூபாய் 3 லட்சம் வீதம் வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.