வயல்வெளியில் கவிழ்ந்த டேங்கர் லாரி – வீணான சமையல் எண்ணெய்

வயல்வெளியில் கவிழ்ந்த டேங்கர் லாரி – வீணான சமையல் எண்ணெய்
Spread the love

தருமபுரியில் வயலுக்குள் கவிழந்து விழுந்த டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கீழே கொட்டி வீணானது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் குடம் குடமாக அதனை பிடித்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தனியார் ஆயில் மில் செயல்படுகிறது. இங்கிருந்து சுமார் 25 டன் சமையல் எண்ணெய் டேங்கர் லாரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள எண்ணெய் பாக்கெட் செய்யும் கம்பெனிக்கு நேற்று அனுப்பப்பட்டது. மணி என்பவர் லாரியை ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி – தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காவேரிப்பட்டினம் பகுதியில் சென்றபோது, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை, பகுதி வழியாக, ராயக்கோட்டைக்கு சென்று லாரி கொண்டிருந்தது.

காடு செட்டிப்பட்டி அருகே பெரிய தப்பை பகுதியில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக திடீரென லாரி டிரைவர் மணியின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் பின்னோக்கி டேங்கர் லாரி செல்ல தொடங்கியது. இதனையடுத்து டிரைவர் மணி பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் நோக்கில், சாமர்த்தியமாக அருகிலுள்ள நெல் வயலுக்குள் டேங்கர் லாரியை இறக்கினார். இதனால் டேங்கர் லாரி நிலைகுலைந்து கவிழ்ந்தது.

டிரைவர் மணி லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் சமையல் எண்ணெய் கீழே கொட்டியது. சமையல் எண்ணெய் கீழே கொட்டுவதை அந்த அந்த பகுதி மக்கள், காலி குடங்களுடன் வந்து தண்ணீரை பிடிப்பதுபோல் சமையல் எண்ணெய்யை பிடித்து சென்றனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று, கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான சமையல் எண்ணெய் வீணானதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *