பறக்கும் படையினர் அதிரடி… அமைச்சர் படத்துடன் விநியோகம் செய்யப்பட்ட புடவைகள் பறிமுதல்!

பறக்கும் படையினர் அதிரடி… அமைச்சர் படத்துடன் விநியோகம் செய்யப்பட்ட புடவைகள் பறிமுதல்!
Spread the love
   தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடகவிருப்பதால், தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்த நிலையில் அங்கங்கே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திரபுரம் நாட்டார்வட்டம் பகுதியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக மறந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் உருவபடம் பொறித்த கை பையில் புடவை வைத்து அப்பகுதி கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
   இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விநியோகம் செய்த சுமார் 59 புடவைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புடவைகளை துணியால் கட்டி சீல் வைத்து திருப்பத்தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
    இதே போன்று மேலும் அப்பகுதியில் 5 புடவைகளை பறிமுதல் செய்தனர். தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் படம் பொறிக்கப்பட்ட பையில் புடவைகளை வாக்காளர்களுக்கு வழங்கி வரும் சம்பவம் அத்தொகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *