இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
Spread the love

எத்தனையோ பேராசிரியர்கள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர். எத்தனையோ இனப் போராளிகளை உலகம் கண்டுள்ளது. ஆனால் யாருக்குமே கிடைக்காத தனிச் சிறப்பு, உயர் அடை மொழி ஒன்று, மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மட்டுமே உண்டு. “இனமான பேராசிரியர்” என்பதுதான் அந்த பெயர். முதல்வர் இருக்கையை அலங்கரித்த, சிறந்த பேச்சாளர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோருக்கு வழங்கப்படாத இந்த அடை மொழி அன்பழகனுக்கு மட்டும் எப்படி பொருந்திப்போனது? அன்பழகன் ஜாதி, மதப் பற்றுக்களை எதிர்த்தார். ஆனால் இனப் பற்றை உயிரென போற்றினார். தமிழன் என்ற மொழிப் பெருமிதம், திராவிட இனப் பெருமிதம் அவரிடம் அளப்பறிய இருந்தது. தமிழன் என்றோர் இனம் உண்டு.

தனியே அவருக்கு ஒரு குணமுண்டு என்பார்களே, அந்த குணம் வாய்க்கப்பட்டவர் அன்பழகன். அந்த குணம்தான், இன மானம். அன்பழகன் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ‘தமிழர் திருமணமும், இனமானமும்’ என்ற பெயரிலான புத்தகம் அதில் முக்கியமானது. “தொண்டா, துவேஷமா” என்ற புத்தகம் பிராமணர்கள் மற்றும் ஜாதி ஏற்பாடுகள் குறித்து நிறைய பேசக்கூடிய ஒன்று. புது வாழ்வு’ என்ற பெயரில் அன்பழகன், பத்திரிக்கை துவங்கினார். வைதீக அரசியலால் தமிழன் தாழ்ந்துவிட்டான், அவனுக்கு புது வாழ்க்கை தேவை என்று பொருள்படும் வகையில், ‘புது வாழ்வு’ என்று பத்திரிக்கைக்கு பெயர் சூட்டினார். எங்கெல்லாம் தமிழர் பாதிக்கப்பட்டனரோ, அப்போது, முதல் ஆளாக துடிக்கும் இதயம் அன்பழகனுடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *