மொத்தம் 15 கிளைகளிலும் கார்பொரேட் அலுவலகம் வீடுகள் என மொத்தம் 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. குறைந்தவிலையில் நகைகள் விற்பனை என விளம்பரம் செய்துவந்த லலிதா ஜுவல்லரியில் வரிஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த புகாரின் பேரில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இதில் 1000கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் கட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.2கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டது.
அந்த நிறுவனம் கணக்கில் வராத வகையில் ரொக்கமாக பரிவர்த்தனைகலை மேற்கொண்டிருப்பதும் தனது கிளைகளில் இருந்து கடன்வாங்கியதை போல பொய்கணக்கு
காட்டியிருப்பதும் தெரிய வந்தது. மேலும் உள்ளூரில் வட்டிக்கு விடுபவர்களிடமிருந்து ரொக்கமாக கொடுக்கல் வாங்கல் நடைபெற்றிருப்பதோடு, கணக்கில் வராமல் தங்கம் பெருமளவில் வாங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படுமென வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளார்.
லலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு

Spread the love