இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவித்தார். பாசிசத்திற்கு எதிரான ஓட்டுகள் சிதற கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கிறோம் என்றும் அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தமிழகத்தில் போட்டியிடுவதால் உறுதுவை தாய் மொழியாக கொண்ட முஸ்லீம்கள் அதிகம் வாழும் வாணியம்பாடி, வேலுர், ஆம்பூர் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் திமுக கூட்டணியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார். மேலும்,
தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற சிறு கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்க வேண்டும் எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Spread the love
online dating site
local dating sites for free