அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்!

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்!
Spread the love

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் காலமானார்.

ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து 2015ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார்.தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

இந்தியாவின் அக்னி ஏவுகணை, அணுவெடிச் சோதனை ஆகியவற்றில் இவரது பங்களிப்பு இவருக்கு புகழை தேடித் தந்திருந்தன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (DRDO) ஆகியவற்றில் பதவிகள் வகித்தார் அப்துல் கலாம்.

பல குடியரசுத் தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும், அப்துல் கலாம் நாட்டில், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய உற்சாகம், தாக்கம் மற்றவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

அவரின் சகோதரர் இன்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக முத்துமீரான் மரைக்காயர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 104 என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *