கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Spread the love

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு.
இவருக்கு அருண்குமார்(25) என்ற மகனும் பிரீத்தா(30) என்ற மகள் ஒருவரும் உள்ளனர். பிரீத்தா மனநலம் பாதிக்கப்பட்டவர். அருண்குமார் IT ஊழியராக பணிபுரிந்து வருகிறார் இந்த சூழலிலும் அருண்குமார் மற்றும் பிரீத்தா ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததால் அலமேலு இருவரையும் தேடியுள்ளார். இந்த சூழலில் காணாமல் போனவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அலமேலுவிற்கு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அலமேலு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் இருவரையும் அவர்களது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்டனர்.
ஏற்கனவே கடன் பிரச்சனையிலிருந்த இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருவரின் உடலை மீட்ட காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *