அதிமுக கூட்டணிக்கு இப்படியொரு ஆதரவு கொடுத்த சிறிய கட்சிகள்!

Spread the love

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்துள்ள சிறிய கட்சிகளின் பட்டியலை காணலாம் . தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றது. அதிமுகவைப் பொறுத்தவரை பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. தேமுதிக உடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் நல்ல செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கட்சிகளுடன் பேச்சு நிறைவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் நேற்று வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *