4வது மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமி, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானார். இச்சம்பவம், சென்னை கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, கொருக்குப்பேட்டை, நேதாஜி நகர், 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் செல்போன் கடை வைத்துள்ளார், இவரது மகள் லட்சய்யா (12). அதே பகுதியில் உள்ள பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை லட்சயா, வீட்டின் நான்காவது மாடியில்,விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சிறுமி, லட்சய்யாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கப்பக்கத்தினர் ஓடி வந்தனர், அங்கு, 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, துடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவளை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சிறுமி லட்சய்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி – விளையாட்டின்போது விபரீதம்

Spread the love