சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 32 எஸ்ஐ கள் பணியிட மாற்றம்

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 32 எஸ்ஐ கள் பணியிட மாற்றம்
Spread the love

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 32 எஸ்ஐ கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை எஸ்பி ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எஸ்ஐ வி.ஆறுமுகம், குரும்பூர் காவல் நிலையத்துக்கும், கோவில்பட்டி மேற்கு எஸ்ஐ ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ், வடபாக்கத்திற்கும் , மற்றொரு எஸ்ஐ குருசந்திரவடிவேல் ஒட்டப்பிடாரத்திற்கும், நாலாட்டின்புதூர் பெண் எஸ்ஐ அங்குத்தாய், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், இங்கேயே பணியாற்றும் பெண் எஸ்ஐ காந்திமதி, நாலாட்டின்புதூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடம்பூர் எஸ்ஐ பாண்டியன், புதுக்கோட்டைக்கும், கடம்பூர் எஸ்ஐ நவநீதன், தாளமுத்துநகருக்கும், நாரைக்கிணறு எஸ்ஐ தளவாய்ஜம்புநாதன் நாசரேத்துக்கும், ஓட்டப்பிடாரம் எஸ்ஐ ரமேஷ்குமார், கோவில்பட்டி கிழக்கு பகுதிக்கும், புதுக்கோட்டை எஸ்ஐ முத்துகணேஷ், தூத்துக்குடி தென்பாகத்திற்கும், அதே ஸ்டேஷன் எஸ்ஐ ராஜேஷ் கண்ணா, கோவில்பட்டி மேற்கு பகுதிக்கும், சிப்காட் எஸ்ஐ முத்துகிருஷ்ணன் ஆழ்வார்திருநகர்க்கும் , நாசரேத் எஸ்ஐ தங்கேஸ்வரன், சிசிபிக்கும், அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் அனந்த முத்துராமன், செய்துங்கநல்லூருக்கும் இடமாற்றம் செய்துள்ளனர்.

ஆழ்வார்திருநகரி எஸ்ஐ முத்துவீரப்பன் தெர்மல்நகருக்கும், ஏரல் எஸ்ஐ முருக பெருமாள் தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திற்கும், குரும்பூர் எஸ்ஐ குமார், கயத்தாறு பகுதிக்கும், செய்துங்கநல்லூர் எஸ்ஐ முகமதுபைசல், கடம்பூருக்கும், வைகுண்டம் எஸ்ஐ ரோய்ஸ்டன் தட்டார்மடம் பகுதிக்கும், ஆத்தூர் எஸ்ஐ ஜான்சன் தாளமுத்துநகருக்கும், குலசேகரன்பட்டிணம் எஸ்ஐ முனியாண்டி வைகுண்டத்திற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் ராஜாமணி, ஆத்தூர் பகுதிக்கும் மாற்றம் செய்துள்ளார்.
கன்ட்ரோல் ரூம் எஸ்ஐ விஜயகுமார், கோவில்பட்டி மேற்கு பகுதிக்கும், வடபாகம் எஸ்ஐ சிவராஜா, கோவில்பட்டி மேற்கு பகுதிக்கும், தாளமுத்துநகர் எஸ்ஐ விஜயகுமார் ஏஎல்ஜிஎஸ்சி யூனிட்க்கும், தாளமுத்துநகர் எஸ்ஐ மரிய இருதயம், நாலாட்டின்புத்தூருக்கும், தெர்மல் நகர் எஸ்ஐ திருமலைமுருகன், குலசேகரன்பட்டினத்திற்கு என மாவட்டம் முழுவதும் 32 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *