அமமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டி

அமமுக கூட்டணியில்  3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டி
Spread the love

அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு.பாரிஸ்டர் அசதுத்தீன்ஒவைசி எம்.பி. தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் அமமுகவுடன் கூட்டணி உறுதியானதாக ஒவைசி கட்சியின் மாநிலத் தலைவர் வக்கீல் அஹமத் அறிவித்தார்.
                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *