தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வெற்றி

தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு வெற்றி
Spread the love
  ஒரு தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தமிழகம், கேரளாவில் நடந்தது. திமுக விற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என தமிழக மக்களிடம்  நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
      இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமையும் என்றும், திமுக கூட்டணிக்கு 43.2% வாக்குகள்  கிடைக்கும் என்றும் தமிழகத்தில் 158 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும் எனவும் அதிமுக கூட்டணி 65 இடங்களில்  வெற்றிபெரும்  எனவும், கேரளாவில்  பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கட்சி  மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
      பிரதமர் மோடி செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பது தமிழக மக்களின் கருத்தாக பதிவாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் ஆகும் தகுதி அதிகமாக உள்ளதாக கேரளா மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ராகுல் காந்திக்கு பிரதமராக 55% பேரும், மோடி பிரதமராக 31.95% பேரும் கேரளாவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில்  டைம்ஸ் நொவ் நடத்திய கருத்துக்கணிப்பு  மேலும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *