புதுச்சேரியை பா.ஜ.க. கைப்பற்றும் – கருத்து கணிப்புகள்

புதுச்சேரியை பா.ஜ.க. கைப்பற்றும் – கருத்து கணிப்புகள்
Spread the love

புதுச்சேரியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணி்ப்புகள் தெரிவிக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காகன தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகும். இந்த சூழ்நிலையில் அந்த யூனியன் பிரதேசத்தில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.

டைம்ஸ் நவ்-சி வோட்டர்ஸின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கைப்பற்றும். சட்டப்பேரவை தேர்தலில் அந்த கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.

புதுச்சேரியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 முதல் 14 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதர கட்சியினர் ஒரு இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரியில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் முதல்வராக இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது, ஏ.என்.ஐ.ஆர். காங்கிரஸ் தலைவர் என் ரங்கசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரங்கசாமியை பா.ஜ.க சமாதானப்படுத்த வேண்டும். அப்படி செய்ய தவறிவிட்டால், ரங்கசாமி தனியாக செல்ல முடிவு செய்தால் புதுச்சேரியில் 4 முனை போட்டி ஏற்படும். அது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறி விடும் வாய்ப்புள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *