நிவர் புயலால் NET தேர்வு ஒத்திவைப்பு

நிவர் புயலால் NET தேர்வு ஒத்திவைப்பு
Spread the love

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை தேசிய தகுதித் தேர்வு (CSIR – NET) நடக்க இருந்தது. இந்தாண்டுக்கான தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டது. இதைதொடர்ந்து கடந்த 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடந்தன.

இந்நிலையில், நிவர் புயலால், நாளை நடக்க இருந்த NET தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை தடை செய்தது.

இதனால், உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களை சென்றடைய முடியாது. கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணிபுரிவதற்கான தகுதி தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பதிவு செய்வதற்கான தகுதி தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வாகவும் இந்தத் தேர்வு அமைந்துள்ளதால், முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாகக் கருத வேண்டியுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த NET தேர்வு, நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி http://nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *