மும்பை – கோவை இடையே சிறப்பு ரயில்….

மும்பை – கோவை இடையே சிறப்பு ரயில்….
Spread the love

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது தளா்வு செய்யப்பட்டுள்ளது. இந்தவேளையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையொட்டி, கோவை – மும்பை இடையே தினமும் சிறப்பு ரயில் டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படுவதக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை.

லோக்மான்யா திலக் டெர்மினஸ், கோவை (வண்டி எண்: 01013) இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் டிசம்பர் 1ம் தேதி முதல் இரவு 10.35 மணிக்கு லோக்மான்யா திலக் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புறப்படும். மறுமார்க்கமாக கோவை லோக்மான்யா திலக் டெர்மினஸ் (01014) இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் டிசம்பர் 3ம் தேதி முதல் காலை 8.55 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *