விவசாயிகளின் பொது வேலை நிறுத்தம் – ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி

விவசாயிகளின் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி : புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லி எல்லையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் 120 நாட்களை எட்டிய நிலையில், நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு (பாரத் பந்த்) விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘அராஜகங்கள், அநீதி, ஆணவத்தை சத்தியாகிரகம்தான் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று இந்தியாவின் வரலாறு காட்டுகிறது. விவசாயிகளின் போராட்டம் தேசிய நலன் சார்ந்ததாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.