விமான பயணிகளின் உடமைகள்: டோர் டெலிவரி சேவை தொடக்கம் – இண்டிகோ நிறுவனம்

விமான பயணிகளின் உடமைகள்: டோர் டெலிவரி சேவை தொடக்கம் – இண்டிகோ நிறுவனம்
Spread the love

விமான பயணிகள் தங்கள் உடமைகளை இனி எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. அவர்களது உடமைகளை அவர்களின் வீட்டிற்கே கொண்டு செல்லும் சேவையை டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது.

இண்டிகோ நிறுவனம், கார்டர் போர்ட்டர் (CarterPorter) என்ற டெலிவரி (delivery) சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பயணிகளின் வீட்டுக்கே சென்று அவர்களது உடமைகளை கொண்டு சேர்க்கும் சேவையை தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி மற்றும் ஐதரபாத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கூடியவிரைவில் மும்பை மற்றும் பெங்களூரிலும் டோர் டெலிவரி சேவை தொடரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டிகோ விமானத்தில் பயணிக்கும் பயணிகள், தங்களின் உடமைகளை இனி அவர்களுடன் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. இந்த சேவை மூலம் உடமைகள் அவர்கள் வீட்டிலிருந்து, அவர்கள் பயணிக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். இதற்கு இவர்கள் வசூலிக்கும் தொகை ரூ. 630 முதல் தொடங்கிறது. ( ஒரு வழிப் பயணத்தின் கட்டணம்)

இதுதொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் அதிகாரி சஞ்சய் குமார் கூறுகையில் ‘அதிகபடியான உடமைகளை வைத்திருக்கும் பயணிகள் இந்த சேவை மூலம் பயன்பெறுவர். மேலும் தொழில் தொடர்பான முக்கிய நிகழ்வுகளுக்கு செல்லும் பயணிகள், நேரடியாக விமாநிலையத்திலிருந்தே தங்களது பயணத்தை தொடர முடியும். அவர்கள் இந்த சேவை மூலம் தங்களது உடமைகளை நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.’ என்று கூறினார்.

கார்டர் போர்ட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஹர்ஷ வர்தன் கூறுகையில் ‘இந்த சேவை மூலம் பயணிகள் அதிக நேரம் விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த சேவையை பயன்படுத்தினால், முக்கிய நகரங்களுக்கு பயணிகள் பயணிக்கும்போது அவர்கள் எந்த உடமைகளையும் உடன் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை’ என்று தெரிவித்தார்.

பணிகளின் விமானம் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த சேவை மூலம் உடமைகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.

2 thoughts on “விமான பயணிகளின் உடமைகள்: டோர் டெலிவரி சேவை தொடக்கம் – இண்டிகோ நிறுவனம்

  1. Great site you have here but I was wondering if you knew of any discussion boards
    that cover the same topics discussed in this article? I’d really
    love to be a part of group where I can get advice from other experienced individuals
    that share the same interest. If you have any recommendations, please let me know.
    Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *