பிள்ளைகளை போல் வளரும் பாம்புகள்…. புத்த துறவியின் மனிதாபிமானம்

பிள்ளைகளை போல் வளரும் பாம்புகள்…. புத்த துறவியின் மனிதாபிமானம்
Spread the love

கொடிய விஷமுள்ள பாம்புகளை, தனது பிள்ளைகளை போல் புத்த துறவி ஒருவர் மியான்மரில் வளர்க்கிறார்.

69 வயதாகும் இந்த துறவி கடந்த 5 ஆண்டுகளாக மலைப்பாம்புகள், அதிக விஷம் கொண்ட நல்ல பாம்புகள், கட்டுவிரியன் உள்பட பல்வேறு பாம்புகளை, யாங்கூனில் உள்ள தனது ஆசிரமத்தில் வளர்த்து வருகிறார். அந்நாட்டில் உள்ள பொது மக்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் தீயணைப்பு வீரர்கள் தங்களிடம் பிடிபடும் பாம்புகளை இவரிடம் கொடுக்கின்றனர்.

தன்னிடம் வளரும் பாம்புகளை சிறிது காலம் கழித்து காட்டில் விடுகிறார். ஆனால், அவை மறுபடியும் வியாபார நோக்கத்துக்காக பிடிபடக்கூடும் என கவலையுடன் கூறுகிறார். மேலும், பாம்புகள் கொல்லப்படுவதை தடுப்பதற்காகவும், சீன பாரம்பரிய வைத்தியத்திற்காக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாம்புகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *