ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து வெளியேறுகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்..??

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து வெளியேறுகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்..??
Spread the love

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி தகவல்கள் கடந்த சில வாரங்களாகவே
வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதி ஆகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களின் பங்கு அதிகம். இப்படிப்பட்ட சூழலில் இந்த முடிவை எல்ஜி நிறுவனம் எடுத்துள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் சந்தித்த தொடர் நஷ்டம் தான் என தெரியவந்துள்ளது. 2020இல் மட்டும் சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர்களை மொபைல் பிரிவில் இழந்துள்ளது அந்நிறுவனம்.

எல்ஜியின் மொபைல் பிரிவை வாங்க, கூகுள், பேஸ்புக், வோக்ஸ்வேகன் உட்பட பல நிறுவனங்கள்ஆர்வம் செலுத்தி வந்தன. இருப்பினும் வணிக ரீதியிலான பேச்சுவரத்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அதே நேரத்தில் மடிக்கும் வகையிலான ரோலபில் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியட திட்டமிட்டு வருகிறதாம். இருப்பினும் அதில் எந்தவித தெளிவான தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. நீண்ட நாட்களாவே இந்த பணியில் அந்நிறுவனம் ஈட்டுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *